முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் நியூயார்க் நகரில் காலை தொடங்கியது.  மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, நடப்பு சாம்பியன் செரீனாவுடன் மோதினார் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார்.  இரண்டாவது செட்டிலும் செரீனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, திடீரென டியாட்சென்கோ காயம் அடைந்தார், அப்பொழுது காயம் காரணமாக தாம் விலகுவதாக அறிவித்தார். இந்த சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.

இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.  ஷரபோவா விலகல்: போட்டித் தரவரிசையல் 3-வது இடத்தில் இருந்த ஷரபோவா, வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து விலகியது குறித்து டுவிட்டரில் ஷரபோவா கூறியிருப்பதாவது:  துரதிருஷ்டவசமாக இந்த முறை அமெரிக்க ஓபனில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

போட்டியில் பங்கேற்பதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் போதுமான காலஅவகாசம் கிடைக்கவில்லை. அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ள சீன ஓபனில் ரசிகர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதில் சிறப்பாக ஆடி இந்த ஆண்டை வெற்றியோடு முடிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்