முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் போலீஸ் காவல் 5-ம் தேதி வரை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேரின் போலீஸ் காவல் வரும் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மைக்கேல் போராவை கொல்ல முயன்றதாக இவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் இந்திராணியிடம் இதுவரை 90 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷீனா போராவை இந்திராணியும் அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவும் கொலை செய்ததும் அதற்கு அவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து இந்திராணி 25-ம் தேதியும், சஞ்சீவ் கண்ணா 26-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரையும் கர் காவல் நிலைய போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இந்திராணி உள்ளிட்ட மூவரையும் பாந்ரா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சந்த்கடே முன்பு போலீஸார் திங்கட்கிழமை ஆஜர்படுத்தினர். 

அப்போது, இந்திராணி மற்றும் கண்ணா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குஞ்சன் மங்களா மற்றும் ரிஷிகேஷ் ஆகியோர் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷீனாவின் செல்போன் மற்றும் அவரது உடை களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.  மேலும் இந்தக் கொலையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வெளியே உள்ள மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூவரின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று போலீஸார் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மூவரின் போலீஸ் காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையே, தன்னையும் கொல்ல முயன்றதாக ஷீனாவின் சகோதரர் மைக்கேல் போரா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திராணி உள்ளிட்ட மூவர் மீதும் மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அசாமில் வசித்து வரும் அவரது சகோதரர் மைக்கேல் போராவிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின்போது, ஷீனா கொல்லப்பட்ட அதே நாளில், ஓட்டலில் தங்கி இருந்த எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வருவதற்குள் மயக்கம் தெளிந்ததால் தப்பிச் சென்றுவிட்டேன். இல்லாவிட்டால் என்னையும் கொலை செய்திருப்பார்கள்” என்று அவர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  வொர்லி பகுதியில் உள்ள இந்திராணி, பீட்டர் முகர்ஜியின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் ஒரு சூட்கேஸை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதில் மைக்கேலை கொலை செய்வதற்கான திட்டம் தொடர்பான ஆவணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் ஷீனாவின் சடலத்தை எரித்த ராய்கட் வனப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சம்பவத்தை நடித்துக் காட்டச் செய்தனர். முன்னதாக, சனிக்கிழமை நேருக்கு நேர் நடைபெற்ற விசா ரணையின்போது ஷீனா கொலை தொடர்பாக இந்திராணியும், சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே இந்திராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷீனா அமெரிக்காவில் உள்ளதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக  இந்திராணியின் முதல் கணவர் வங்கதேசத்துக்கு  தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி முகர்ஜியில்  முதல் கணவர் சித்தார்த் தாஸ். பணத்தாசை, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவர் இந்திராணி என அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இந்திராணி கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே வங்கதேசம் போய் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷீனாவின் கொலை வழக்கில் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சித்தார்த்தும், இந்திராணியும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனபோதும் கணவன், மனைவியாக 1989-ம் ஆண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஷீனாவும், மிக்கயில் போராவும். சித்தார்த்தைப் பிரிந்த பின்னர் சஞ்சீவ் கன்னாவைத் திருமணம் செய்து கொண்ட இந்திராணி, பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து பீட்டர் முகர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago