முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 55 சதவீதத்தினருக்கு முதல் வருடத்தில் உரிய முறையில் தாய்ப்பால் தரப்படுவது இல்லை

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 55சதவீதத்தினருக்கு பிறந்த முதல் வருடத்தில் போதிய தாய்ப்பால் தரப்படுவது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாய்ப்பாலை ஊக்குவிக்கும் அமைப்பு ம்(பிபிஎன்ஐ) பொது சுகாதார ஆதார அமைப்பும் இணைந்து பிறந்த குழந்தைகளுக்கு உரிய அளவில் தாய்ப்பால் தரப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் ஆண்டு தோறும் அதாவது பிறக்கும்குழந்தைகளில் 55சதவீத குழந்தைகளுக்கு இந்தியாவில் போதிய அளவில் தாய்ப்பால் தரப்படுவது இல்லை என தெரிய வந்தது.

அதாவது14கோடியே 50லட்சம் குழந்தைகளுக்கு பிறந்த ஓராண்டில் உரிய அளவில் தாய்ப்பால் தரப்படுவது இல்லை.இந்த ஆய்வு விவரத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் டெல்லியில் வெளியிட்டார். உலக அளவில் பிறக்கும் குழந்தைகளில் உரிய முறையில் தாய்ப்பால் தரப்படுகிறதா என்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான்,வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவை விட தாய்ப்பால் தருவதில் முன்னிலையில் இருக்கின்றன.

குடும்பத்தில் பெண்களுக்கு உரிய ஆதரவு இல்லாத நிலை, உரிய சுகாதார ஆதரவு இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு போதிய அளவில் தாய்ப்பால் தரப்படாத நிலை காணப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு உரிய தாய்ப்பால் தரப்படாத நிலையில் அந்த குழந்தை உயிருடன் வாழ்வதில்  பிரச்சினை காணப்படுகிறது.உரிய தாய்ப்பால் தரப்படாத குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் முயற்சியின் அடிப்படையில் தாய்ப்பால் ஊட்டும் நடவடிக்கை உலக அளவில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்