முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங் மீது முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் இறுதி முடிவை எடுத்தது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்தான் என்று, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இப்புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம், முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்தது.

தற்போது, அந்த சுரங்கங்களுக்கு இணையதளம் மூலம் மறு ஏலம் நடத்தப்பட்டு, புதிதாக ஒதுக்கீடு நடைபெற்று வருகின்றது. இதனிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சுரங்கம் ஒன்றை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், அப்போதைய நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எச்.சி.குப்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.மாத்தூர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவுகளை எடுத்தார் என்று தெரிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு குறித்து மன்மோகன்சிங்குக்கு எதுவும் தெரியாது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வி.கே.சர்மா வாதாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago