முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் பந்த்: சென்னையில் பிசுபிசுத்தது

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தொழிலாளர் நலச்சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு அளவில் நேற்று  நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் தமிழகத்தை பொறுத்தவரை இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.மேற்குவங்கம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன என்றும் சுமார் 15 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. தொழிலாளர் நலச்சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயத்துக்கு எதிர்ப்பு ஆகியவை உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தை பொறுத்தவரை இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நேற்று  நடைபெற்று வரு நிலையில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடிய நிலையில் பெதுமக்ககளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

 தொழிலாளர் நல சட்டத்தை எந்த வித விதிவிலக்கும் இன்றி அமல் படுத்த வேண்டும்,  குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், புதிய சாலை பாதுகாப்பு திட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்பட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் இன்று காலை சென்னை மற்றும் தமிழகம்  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் ஓடின. சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற போதிலும், பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வந்ததால் எந்த விதஅசம்பாவிதங்களும் இன்றி அரசு பேருந்துகள் இயங்கின. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆட்டோ தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டுள்ள நிலையில், பெரும்பாலான ஆட்டோக்கள் வழக்கம் ஓடின.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு போருந்துகள், தனியார் போருந்துகள் மற்றும் ஆட்டோக்களும் ஓடின.
வேல நிறுத்த போராட்டம் அறிழிக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலான இடங்களில் காலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க தொடங்கியதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.ரயில்கள் ஓடின:சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் ரயில்கள் நேற்று  வழக்கம் போல் இயங்கின. சென்னையில் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் காலையில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. காலையில் பேருந்துகள் ஓடுமா என்ற சந்தகேத்தில் இருந்த பொதுமக்கள் ரயில்களில் சென்றதால் கூட்டம் அதிகம் இருந்தது.விமானங்கள் இயங்கின:சென்னை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் உள்ளூர் விமான நிலயத்திற்கு இன்று காலை விமானங்கள் வழக்கம் போல் வந்து சென்றன. விமான இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விமான நிலைய அதிகாரி ஓருவர் தெரிவிததார். கடைகள் திறப்பு:சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் திறந்தருந்தன.நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன என்று தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொல் கத்தாவில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் புதுடெல்லியில் ஆட் டோக்கள், டாக்சிகள் ஓடாததால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதேபோல கேரள மாநிலத்திலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஓடின. கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்