முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போராவை கொன்றிருந்தால் இந்திராணியை தூக்கில் போடுங்கள்: சித்தார்த் தாஸ் வலியுறுத்தல்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - கொலை செய்யப்பட்ட ஷீனா போராவின் தந்தை சித்தார்த் தாஸ் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஷீனா தனது மகள்தான் என்றும் அவரைக் கொலை செய்திருந்தால் இந்திராணியை தூக்கிலிடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2012-ம் ஆண்டு ஷீனாவின் சடலம் மும்பையை அடுத்த ராய்கட் மாவட்ட வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த செய்தி கடந்த வாரம்தான் வெளியானது. இதுதொடர்பாக ஷீனாவின் தாய் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஆனால் ஷீனாவின் தந்தை சித்தார்த் தாஸ் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் டம்டம் அருகே உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இரு சக்கரவாகனத்தில் சென்ற சித்தார்த் தாஸை அடையாளம் கண்டுகொண்ட செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது, அவர் கோட், ஹெல்மெட் அணிந்து கொண்டு முகம் தெரியாதபடி மூடியிருந்தார்.  ஹெல்மெட்டை கழட்ட மறுத்த அவர் முதன்முறையாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  கடந்த 1986-ம் ஆண்டு இந்திராணியை முதன்முறையாக ஷில்லாங் கல்லூரியில் படிக்கும்போது சந்தித்தேன். மூன்று ஆண்டுகள் குவாஹாட்டியில் உள்ள இந்திராணியின் தந்தை போராவின் இல்லத்தில் சேர்ந்து வாழ்ந்தோம். அப்போது எங்கள் இருவருக்கும் பிறந்தவர்கள் தான் ஷீனா போரா மற்றும் மைக்கேல் போரா. 

எனினும், இந்திராணியை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், பண வசதி இல்லாததால் 1989-ல் அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அப்போது எனக்கு வேலை எதுவும் இல்லை. அதனால் அவர் அந்த முடிவு எடுத்திருக்கலாம்.
அதன் பிறகு அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை. குவா ஹாட்டியில் உள்ள போரா இல்லத்துக்கு நான் சில தடவை சென்றேன். ஆனால் இந்திராணியின் பெற்றோர் என்னை அவமதிக்கும் வகையில் பேசினர். கடைசியாக 2000-ல் போராவின் வீட்டுக்குச் சென்று ஷீனாவை சந்தித்தேன். அதன்பிறகு அங்கு செல்லவில்லை. 

அப்போது ஷீனாவிடம் எனது தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்தேன். ஒரே ஒரு தடவை தொடர்புகொண்டு பேசிய ஷீனா, அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. நான் பல தடவை ஷீனாவை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் பலன் இல்லை.  இந்நிலையில், ஷீனா கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அறிந்து என் இதயம் நொறுங்கி விட்டது. இதன் பிறகுதான் எனது கடந்தகால வாழ்க்கை பற்றி எனது மனைவி பப்ளிக்கு தெரியவந்தது.  எனினும், இந்தக் கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவும் டிஎன்ஏ பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.

இந்தக் கொலையை இந்திராணி செய்திருந் தால் அவரை தூக்கிலிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதுகுறித்து சித்தார்த் தாஸ் மனைவி பப்ளி கூறும்போது, “ஷீனா கொலை வழக்கில் ஒத்துழைக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். ஆனால் அவரது முகத்தைக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள எங்கள் மகனுக்கு எனது கணவரின் கடந்த கால வாழ்க்கை இதுவரை தெரியாது. இந்நிலையில் அவரது முகத்தை ஊடகங்களில் காட்டினால் அவன் வருத்தப்படுவான். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். எனது கணவரின் இந்திராணியுடனான உறவு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago