முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் எங்களுக்கு கடவுள் போன்றவர்: டோணி புகழாரம்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூஜெர்சி - சச்சின் டெண்டுல்கர் என்னை போன் கிரிக்கெட் வீரர்களுக்கு கடவுளை போன்றவர் என்று கிரிக்கெட் வீரர் டோணி தெரிவித்துள்ளார். பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற டோணி நியூஜெர்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வளர்ந்தேன். அவர் எங்களுக்கு எல்லாம் கடவுள் போன்று இருந்தார்.

அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கும். சச்சின் ஒரு சிறந்த முன் மாதிரி. அவர் வெற்றிகரமானவராக இருந்தபோதிலும் தலைக்கனம் இல்லாமல் இருந்தார்.  அவர் ஒவ்வொரு முறை மைதானத்தில் நுழையும்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அக்டோபர் மாதம் நீங்கள் நான் கிரிக்கெட் விளைாடுவதை பார்க்கலாம். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்