முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஷாந்த் ஷர்மா மீதான தடைக்கு கோஹ்லி தான் காரணம்: பயிற்சியாளர் சிராவண் குமார் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - இஷாந்த் ஷர்மா அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காண்பித்து, ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு தடையை வாங்கிக் கட்டிக்கொண்டதற்கு, இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியும், அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியும்தான் காரணம் என்று இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத், பேட்ஸ்மேன் சண்டிமால், குஷால் பெரேரா ஆகியோரிடம் கடும் ஆக்ரோஷம் காண்பித்தார்.

தனக்கு, தொடர்ந்து பவுன்சராக வீசிய பிரசாத்திடம் தனது தலையை நோக்கி பந்தை எறியுமாறு சைகை காண்பித்து, தனது தலையில் தானே அடித்துக்கொண்டார் இஷாந்த் ஷர்மா. சண்டிமாலை அவுட் செய்துவிட்டு, தனது தலையை தானே அடித்துக்காட்டி வெறுப்பேற்றினார். இஷாந்த் ஷர்மா சேட்டைகளை விசாரித்த ஐசிசி அதிகாரிகள், அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டனர். போட்டி ஊதியத்தில் 65 சதவீதம் பிடித்தமும் செய்யப்பட்டுகிறது. இதனால், மொகாலியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இஷாந்த் ஷர்மாவால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் சிராவண் குமார் அளித்துள்ள பேட்டி: ஸ்லெட்ஜிங் என்பது கிரிக்கெட்டில் இருக்க கூடியதுதான். ஆனால் இஷாந்த் ஷர்மா இம்முறை தனது வரைமுறையை தாண்டிவிட்டார். இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு அறையில் என்ன மாதிரி சூழ்நிலை உள்ளதோ, அதை இஷாந்த் ஷர்மா அப்படியே மைதானத்திற்கும் கொண்டுவந்துவிட்டார்.

கேப்டன் விராட் கோஹ்லி, அணி இயக்குநர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஆக்ரோஷம் பற்றி பேசிக்கொண்டுள்ளனர். அவர்களின் பாதிப்புதான் இஷாந்த் ஷர்மாவுக்கு வந்துள்ளது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இஷாந்த் ஷர்மாவிடம் நான் கூறுவேன். ஏனெனில், இறுதியில் நஷ்டமடையப்போவது இஷாந்த் ஷர்மாதான். ஏனெனில் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டபோது, அணி நிர்வாகம், அதை எதிர்த்து பேசவில்லை. ஸ்லெட்ஜிங் செய்யும் கலையை இஷாந்த் ஷர்மா கற்க வேண்டியுள்ளது.

இவ்வாறு சிராவண் குமார் தெரிவித்தார். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இஷாந்த் ஷர்மாவிடம் நான் கூறுவேன். ஏனெனில், இறுதியில் நஷ்டமடையப்போவது இஷாந்த் ஷர்மாதான். ஏனெனில் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டபோது, அணி நிர்வாகம், அதை எதிர்த்து பேசவில்லை. ஸ்லெட்ஜிங் செய்யும் கலையை இஷாந்த் ஷர்மா கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு சிராவண் குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்