முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ள நோட்டை தடுக்க புதிய அம்சங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு அனுமதி

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நாட்டில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக புதிய அம்சங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கள்ளநோட்டு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அனுமதி அளி்க்குமாறு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கோரியிருந்தது. புதிய நோட்டுகளை அச்சடிப்பது தொடர்பான ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை மத்திய அரசு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து 7 அம்சங்கள் புகுத்தப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படவுள்ளன.  முதற்கட்டமாக 500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எல்லை தாண்டிய அந்நி்ய சக்திகளால் இந்தியா முழுவதும் 30 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்