முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாயும் புலி திரைப்படம் உள்ளிட்ட அனைத்து நேரடி தமிழ்த் திரைப்படங்களும் வெளியீடு செய்யப்படும்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, இன்று முதல் புதிய தமிழ்ப் படங்கள், மொழிமாற்றுப் படங்கள் வெளியாகாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்.இன்று வெளியாகவிருக்கும் பாயும் புலி படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என ரோகினி பன்னீர் செல்வம் தலைமையிலான செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் அறிவித்திருந்தனர். டூஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம், இன்று முதல் புதுப் படங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்திருந்தது. ஆனால், இன்று படத்தை வெளியிடவிருந்த யாரும் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. படத்தை வெளியிடாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனக் கூறி, செங்கல்பட்டு தவிர்த்த பிற ஏரியாக்களில் படத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தமிழ் திரையுலகின் அவசர கூட்டம் அக்கார்ட் ஹோட்டலில் நடந்தது. இதில் கலைப்புலி தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் தமிழ் திரையுலகின் ஒட்டு மொத்த நலன் கருதி புதிய முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், ‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கூடி எடுத்த முடிவின்படி, ஏற்கெனவே திட்டமிட்டபடி 4.9.15 வெள்ளிக்கிழமை பாயும் புலி திரைப்படம் உள்ளிட்ட அனைத்து நேரடி தமிழ்த் திரைப்படங்களும் வெளியீடு செய்யப்படும். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து படங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அல்லாமல் வேறு திரைப்படங்களை மனதில் வைத்து பாயும் புலி திரைப்படம் உள்பட அனைத்துத் திரைப்படங்களையும் திரையிடாமல் நஷ்டத்தை ஏற்படுத்தும் திரையரங்குகள் மீது, தமிழ்த் திரையுலகம் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும். -இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago