முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத்தில் திடீர் கோளாறு: அவசரமாக சென்னையில் தரை இறக்கம்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - 235 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி 235 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த விமானம் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த 235 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், விமான நிலைய பொறியாளர்கள் விமானத்தின் எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 235 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டு அதிகாலை 4.30 மணியளவில் விமானம் மலேவியாவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. விமானம் பழுதானதை விமானி உடனடியாகக் கவனித்ததால் அந்த விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்