முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடு: 13 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சிரியா, ஈராக்கில் பெரும் நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள், இந்தியாவில் ஆள்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக் கையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதன்பேரில், டெல்லி, மேற்கு வங்கம், உ.பி., ராஜஸ்தான் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட் டத்தை மத்திய உள்துறை அமைச்ச கம் டெல்லியில் சமீபத்தில் நடத்தியது.

  இக்கூட்டத்தில், மத்திய கிழக் காசியாவில் மிகப்பெரிய தீவிர வாத அமைப்பாக செயல்பட்டு வரும் ஐ.எஸ்., இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், இதற்காக இங்கேயே ஆட்களை தேர்வுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இதன் மீது 13 மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இந்தியாவில் ஊடுருவ எல்லைப்புற மாவட்டங்களை ஐ.எஸ். தேர்ந்தெடுத்திருப்பதால், குறிப்பாக வங்கதேசத்துடன் எல்லையை கொண்டுள்ள மேற்குவங்க மாநிலம் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்