முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 6 ஆயிரம் கோடி வங்கிக்கடனாக வழங்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடந்த நான்காண்டுகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக ரூ 20 ஆயிரத்து 270 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக ரூ 6 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த அறிக்கையில் கூறியதாவது:,

ஊர் செழித்தால் நாடு செழிக்கும் என்பதற்கேற்ப ஊராட்சிகளில் வாழும் மக்கள் நலன் கருதி நகரங்களில் கிடைக்கப்பெறும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்களிலும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது. ஊரக சாலைகளை மேம்படுத்துதல், வீட்டு வசதியினை அளித்தல், தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துதல்,போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில், ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பின் வரும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

1. ஊரகச் சாலைகள் சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டு 4,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்பாட்டிற்கு, 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஊரகச் சாலைகள் மேம்பாட்டிற்காக நபார்டு திட்டத்தின் கீழ் 41 பாலங்கள் ரூ 50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் ஊரகச் சாலைகள் பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செடீநுயப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரகப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சாலைகள், பாலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு பணிகள் 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாநில உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், பாலங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக மொத்தம், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, நடப்பாண்டில் மொத்தம் 1475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களிலேயே பல்வேறு அரசு சேவைகளான பிறப்பு / இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு உதவிகள் ஆகியவற்றை விரைந்து பெறும்வகையில் மின்னணு சேவையை அறிமுகப்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கென 2015-16ஆம் நிதி ஆண்டில் 3890 கிராம ஊராட்சிகளில் சேவை மையங்கள் 661 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. ஊரகப் பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளின் மின் கட்டண செலவு மற்றும் பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், பசுமைத் தொழில் நுட்பத்தினை ஊக்குவித்திடும் பொருட்டும் நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக 300 கோடி ரூபாய் செலவில் மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், குக்கிராமங்களை வளர்ச்சி அலகாகக் கொண்டு ஒவ்வொரு குக்கிராமத்திலும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கோடு, தமிடிநநாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்னும் ‘தாடீநு’ திட்டத்தினை எனது தலைமையிலான அரசு 2011-12 முதல் செயல்படுத்தி வருகிறது. ‘தாய்’ மற்றும் இதர திட்டங்களின் கீடிந கிராமங்களில் உள்ள தெருக்கள் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு அமைக்கப்படும் தெருக்கள், எழிலாக இருப்பதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டவும் பயன்படும். 2015-16 ஆம் ஆண்டில் 400 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற தெருக்கள் 120 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் பேவர் பிளாக் கொண்ட தெருக்களாக மாற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. நகரப் பகுதிகளின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் உருவாகும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து, முறையாக அப்புறப்படுத்துதல் மிகப் பெரிய சவாலாக அமைந்து உள்ளது. கிராமங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கு எனது அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. கிராம ஊராட்சிகளில் கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் எனது அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2,000 கிராம ஊராட்சிகளில் ‘தூய்மை காவலர்களை’ கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்பதையும்; இதற்கென 300 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

6. 30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக ரூ 30 கோடி செலவில் நடப்பாண்டில் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக நிலையான வேலைவாடீநுப்புகள் உருவாக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7. ஊரக பகுதிகளை பசுமை மயமாக்கும் வண்ணம் ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் ஆகிய சாலைகளின் இரு மருங்கிலும் மரக் கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 2,000 கி.மீ நீளமுள்ள சாலைகளின் இரு மருங்கிலும், ரூ 47 கோடியே 20 லட்சம் செலவில் மரக் கன்றுகள் நடப்பட்டு 3 ஊரகப் பகுதிகள் பசுமை மயமாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8. ஊரகப் பகுதியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், தனி நபர் இல்லத்தில் பலன் தரும் பழக் கன்றுகள், மரக் கன்றுகள் வளர்த்திட வழிவகை செய்யும் நோக்கிலும், 2015-16 ஆம் ஆண்டில் 54,000 இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டப் பயனாளிகள் மற்றும் 60,000 பசுமை வீடுகள் திட்டப் பயனாளிகள் என மொத்தம் 1,14,000 பயனாளிகளின் இல்லங்களில், வீட்டுத் தோட்டம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கென ஒவ்வொரு பயனாளிக்கும் 4 பழக் கன்றுகள் அல்லது மரக் கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக் கன்றுகளை பயனாளிகளே தங்கள் தேவைக்கேற்ப தெரிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கென மரக் கன்றுகள் பெறுவது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மூலம் 1,14,000 இல்லத் தோட்டங்களில் மரங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9. நகர்ப்புற வாடிநவாதார இயக்கம் 12 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 96 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற, வாழ்வாதார இயக்கம் மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் மாநில ஊரக வாடிநவாதார இயக்கம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மகளிரை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தினை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனம் மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்திட நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு முதல் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சில கூறுகளான சமூக திரட்டு மற்றும் சமுதாய நிறுவன மேம்பாடு, திறன் வளர்ப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சிகள் மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் ஆகிய செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 178 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

10. சுய உதவிக் குழுக்கள் தங்களது வாடவாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சிறு கடன்கள் வழங்குவதற்காக 58 கோடி ரூபாயினை அமுத சுரபி நிதியாக நடப்பாண்டில் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

11. ஒரு பகுதியில் ஒரே வகை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழில் குழுவிற்கும் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள், அங்காடி வசதிகள் மற்றும் தனித் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதற்காக ஊக்க நிதி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் ஒரே தொழிலை மேற்கொள்ளும் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட குழுவிற்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 1500 ஒத்த தொழில் குழுக்களுக்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

12. கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வகையில் 600 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடி ரூபாய் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்பதை மகிடிநச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறிய தொழில்களை தொடங்கி வாடிநவாதாரம் பெற வழி வகுக்கும்.

13. மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் சுய உதவிக் குழுக்களை, எனது தலைமையிலான அரசு 1991-ஆம் ஆண்டு உருவாக்கியது. ஆண்டு தோறும் புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுவரை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இல்லாத ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர்களைக் கொண்டு 10,000 சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்த ஆண்டு அமைக்கப்படும். இந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

14. சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதன் வாயிலாக பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கடன் சுமைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு 20,270 கோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது நடப்பாண்டிலும் சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழஙகப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கிராமங்கள் மேம்படவும், கிராம மக்கள் வளம் பெறவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்