முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 2.70 கோடியில் 8 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 27 புதிய கிளைகள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் சேவையை விரிவுபடுத்தும்பொருட்டு, 8 மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கிகளின் 27 புதிய கிளைகள் ரூபாய்2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில்துவக்கப்படும். என்று சட்டபேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.  தமிழக சட்டபேரவையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு விடையளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மத்திய கூட்டுறவுவங்கிகளுக்கு மேலும் பொலிவான தோற்றத்தைஏற்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானசேவை அளிக்கவும், கடலுhர் மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கியின் கிளைகளான திட்டக்குடி,புவனகிரி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கியின் தலைமையகம் மற்றும் தாளவாடிகிளை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கியின் சுப்ரமணியபுரம் கிளைஆகிய ஐந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில்நவீனமயமாக்கவும், வாடிக்கையாளர்களுக்குசிறந்த தொழில்நுட்ப சேவை மற்றும் சங்கங்களின் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்த, 29 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள், ரூபாய் 2 கோடியே 90 இலட்சம்மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ஒரு நகரக்கூட்டுறவு வங்கியின் கிளை ரூ.18 இலட்சம்மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 39 கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக கட்டடங்களை ரூபாய்4 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டில்நவீனமயமாக்கப்படும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களின் நகைகள்மற்றும் இதர மதிப்புமிக்கப் பொருட்களைபாதுகாத்திடும் பொருட்டு, 141 தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்ரூ 3 கோடியே 65 இலட்சம் திட்ட மதிப்பீட்டிலும், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம்,சென்னை மற்றும் அதன் மண்டல அலுவலகங்களான கோயம்புத்தூர், தருமபுரி,திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் ரூ.35 இலட்சம் திட்ட மதிப்பீட்டிலும்,வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள்,8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் இரும்புப்பெட்டகங்கள், ஆக மொத்தம் 154 கூட்டுறவு நிறுவனங்களில், ரூ 4 கோடியே 15 இலட்சம்மதிப்பீட்டில் பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும்இரும்புப் பெட்டகங்கள் அமைக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வேளாண்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கஉறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, மேட்டுப்பாளையம், திருமங்கலம், பேரையூர், வாடிப்பட்டி, தேனி ஆகிய வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் ரூ.100.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியஅலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.திருமங்கலம், பேரையூர், வாடிப்பட்டி,உசிலம்பட்டி மற்றும் மேலூர் ஆகியவேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.75.50 இலட்சம்மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.மேலும், ஏல முறை மூலம் நடத்தப்படும்வேளாண் விளைபொருள் விற்பனையைதுரிதமாகவும் ஒளிவு மறைவின்றியும் நடத்திடஏதுவாக ஈரோடு, பெருந்துறை, திருச்செங்கோடு,சேலம் மற்றும் ஆத்தூர் ஆகிய கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் மொத்தம் ரூ.50 இலட்சம்மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிமேற்கொள்ளப்படும்.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் வேளாண்விளைபொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக்கூட்டி விற்பனை செய்து விவசாயபெருங்குடிமக்கள் அதிக இலாபம் பெற்று, தங்கள்வாழ்வாதாரத்தினை வளமாக்கி கொள்ளஒரத்தநாடு, செங்கம், கோவில்பட்டி, புதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் முறையே உளுந்து, நிலக்கடலை,பஞ்சு பதனிடும் மற்றும் விதைநெல் சுத்திகரிப்புஅலகுகள் ரூ.27.43 இலட்சம் மதிப்பீட்டில்அமைக்கப்படும்.வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் வேளாண் பெருமக்கள்மற்றும் வியாபாரிகள் விளைபொருட்களைதுல்லியமாகஎடையிட,இராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ள பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கணினி எடைமேடை அமைத்தல், வேளாண் விளைபொருட்களை உலர வைத்து தரம் பிரித்துஆதாய விலையில் விற்பனை செய்திட ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம்வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச்சங்கம்ஆகியவற்றில்ரூ.10.10இலட்சம்மொத்தமதிப்பீட்டில்உலர்களங்கள் அமைத்தல் ஆகிய 23 பணிகளைமேற்கண்ட 20 வேளாண்மை உற்பத்தியாளர்கள்கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ரூபாய்2 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில்ஏற்படுத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களின் நலம்பேணுதலே கூட்டுறவு வங்கிகளின் தலையாயநோக்கம் எனும் உயரிய நோக்கில், கூட்டுறவுவங்கிகளின் சேவையை விரிவுபடுத்தும்பொருட்டு, 8 மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கிகளின் 27 புதிய கிளைகள் ரூபாய்2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில்துவக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயர்தர சேவையை துரிதமாகவழங்கும் பொருட்டு, 23 மத்திய கூட்டுறவுவங்கிகளில் 46 இயந்திரங்களும், 54 நகரக்கூட்டுறவு வங்கிகளில் 54 இயந்திரங்களும், ஆகமொத்தம் 77 கூட்டுறவு வங்கிகளில் ரூபாய்2 கோடி மதிப்பீட்டில், ரூபாய் நோட்டு பிரிக்கும்100 இயந்திரங்கள் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் முழுசுகாதாரத்தினை அடையும் நோக்கில்,கூட்டுறவுகளின் பங்களிப்பாக 586 தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும்,30 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களிலும், 1 நகரகூட்டுறவு கடன் சங்கத்திலும், 3 கூட்டுறவுபண்டகசாலைகளிலும் மற்றும் ஒருநீரேற்றுப்பாசன சங்கத்திலும், ரூபாய் 1 கோடியே86 இலட்சம் மதிப்பீட்டில் 621 கழிப்பறைகள்கட்டப்படும்.  விலைவாசிஉயர்வினைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றிவரும் கூட்டுறவு பண்டகசாலைகளின் சேவையினைமேம்படுத்தும் பொருட்டு, பணகுடி பொது கூட்டுறவுபண்டகசாலைக்கு ரூ.24.40 இலட்சம் மதிப்பீட்டில்அலுவலகத்துடன் கூடிய வணிக வளாகமும், நீலகிரிகூட்டுறவு நிறுவனத்திற்கு ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில்வணிக வளாகமும் மற்றும் திருவண்ணாமலைமாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலைக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில்அலுவலக வளாகத்துடன் கூடிய கிடங்கு ஆகியவைரூபாய் 1 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில்கட்டப்படும்.

பொதுமக்களுக்குசேவைபுரியும் உயரிய நோக்கத்தின் அடிப்படையில்கூட்டுறவுத் துறையில் 4,239 பொதுச்சேவைமையங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளபொதுமக்களுக்கு அரசின் மின் ஆளுமைசேவைகளை திறம்பட வழங்கி வருகின்றன. மேலும்,அதிகப்படியான மக்களுக்கு இச்சேவையைவிரிவுபடுத்தும் பொருட்டு, 200 பொதுச்சேவைமையங்கள், ரூபாய் 1 கோடியே 20 இலட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்படும். பெரும்பலநோக்குக்கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் வேளாண்விளை பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக்கூட்டி விற்பனை செய்து சங்க உறுப்பினர்கள்நியாயமான இலாபம் பெற, கொல்லிமலை,சித்தேரி, ஏலகிரி, வெள்ளிமலை, கிளாக்காடுமற்றும் நம்மியம்பட்டு ஆகிய 6 பெரும்பலநோக்குகூட்டுறவுச் சங்கங்களில் மிளகு, காப்பி, சாமை,வரகு மற்றும் புளி பதனிடும் அலகுகள் ரூ.18.62 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும்,பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின்செயல்பாட்டினை மேம்படுத்தவும் மற்றும் சங்கஉறுப்பினர்களுக்கு துரித சேவை வழங்கவும் 22 பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்குமொத்தம் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் கணினிமற்றும் உபகரணங்கள் வழங்கவும்,பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கஉறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும்பொருட்டு சித்தேரி, வெள்ளிமலை மற்றும்கிளாக்காடு ஆகிய 3 பெரும்பலநோக்குகூட்டுறவு விற்பனைச் சங்கங்களில்ரூ.9.10 இலட்சம் மதிப்பீட்டில் பணிமனைகள்அமைக்கவும் ஆக மொத்தம் ரூ.38 இலட்சம்மதிப்பீட்டில் 22 பெரும்பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களில் உட்கட்டமைப்பு வசதிகள்ஏற்படுத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம்செயல்படுத்தப்படும் அரசின் பொது விநியோகத்திட்டம் மற்றும் இதர திட்டங்களை செவ்வனேகண்காணிக்கவும் அத்திட்டங்களை முறையாகநடைமுறைப்படுத்தவும், கூட்டுறவுத் துறையில்பணிபுரியும் 177 அலுவலர்கள் மற்றும்848 களப்பணியாளர்கள் ஆகமொத்தம்1,025 பணியாளர்களுக்கு மூடிய பயனர் குழுதொலைத் தொடர்புவசதி, வருடத்திற்கு ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில்வழங்கப்படும். முதல்வர் ஜெயலலிதாஆணையின்படி, நகரமயமாக்குதல்மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக,நகர்ப்புறத்திற்கு அருகில் செயல்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தங்களின் செயல்பாடுகளை நகரமக்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதுஅத்தியாவசியமாகிறது. இப்பகுதி மக்களின்வங்கித் தேவைகளை கருத்தில் கொண்டு,அம்மக்களுக்கு நகைக்கடன், வீட்டுஅடமானக்கடன் மற்றும் வீட்டு வசதி கடன்கள்வழங்க 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களான மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்), காயரம்பேடு மற்றும் மாத்தூர்(காஞ்சிபுரம் மாவட்டம்), பெண்ணாடம் மற்றும்திட்டக்குடி (கடலூர் மாவட்டம்), பொய்கை,ஆற்காடு மற்றும் காட்பாடி (வேலூர் மாவட்டம்)வத்திராயிருப்பு (விருதுநகர் மாவட்டம்) மற்றும்ஒத்தகடை (மதுரை மாவட்டம்) ஆகியவைகளை நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றி அமைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்