முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச்செயதி வருமாறு: உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழி நெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய் , தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி வழிபடுவார்கள்.

பற்றின்றிக் கடமைகளைச் செய்து, பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் பாதிக்கப்படுவதில்லையோ, அதுபோல விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை என்ற கீத உபதேசத்தை மனதில் நிறுத்தி, கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் உணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்