முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

800 வாரிசுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      தமிழகம்

சென்னை, பணியில் இருக்கும் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 800 காலி பணியிடங்களில் 2 வருட பயிற்சி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

வருடந்தோறும் அரசின் பங்காக ரூ.20கோடியும், அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் பங்காக ரூ.20 கோடியும் சேர்த்துரூ.40 கோடியில் """"விபத்து இழப்பீட்டுத் தொகைநிதியம்"" என்ற ஒரு தனி தொகுப்பு நிதியம்உருவாக்கப்பட்டு விபத்து காப்பீட்டு நஷ்டஈடுவழங்கப்பட்டு வருகிறது. தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, வருடந்தோறும் வழங்கப்படும்அரசின் பங்கு ரூ.20 கோடியிலிருந்துரூ.30 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.போக்குவரத்துக் கழகங்களும் தங்களின்பங்காக ரூ.30 கோடி வழங்கி, இந்நிதியம் ரூ.60கோடி நிதியுடன் செயல்படும்.

பணியில் இருக்கும்போது இறந்ததொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவுமூப்பின் அடிப்படையில், அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப பதவி என ஒரு போக்குவரத்துக்கழகத்திற்கு 100 பணியிடங்கள் வீதம் 8போக்குவரத்துக் கழகங்களுக்கு 800பணியிடங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி இரண்டுஆண்டுகள் பயிற்சியளித்து நிரப்பப்படும்.

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களைஊக்குவிக்கும் பொருட்டு, விபத்தின்றிபணிபுரியும் ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் பெயரால்ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ரொக்கபரிசினைகீழ்க்கண்டவாறு உயர்த்திஆணையிட்டுள்ளார்கள்.ஒரு வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்தரொக்கப்பரிசு ரூ.1,000/-லிருந்துரூ.1,500/- ஆக உயர்த்தப்படுகிறது.ஐந்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு ரூ.5,000/-ரொக்கப்பரிசு இவ்வாண்டு முதல்வழங்கப்படும்.பத்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு ரூ.10,000/-ரொக்கப்பரிசு இவ்வாண்டு முதல்வழங்கப்படும்.பதினைந்து வருடம் விபத்தின்றிபணிபுரிந்த ஓட்டுநர்களுக்குவழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசு ரூ.10,000/-லிருந்து ரூ.15,000/-ஆகஉயர்த்தப்படுகிறது.இருபது வருடம் விபத்தின்றிபணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசுரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆகஉயர்த்தப்படுகிறது.இருபத்தைந்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்த ஓட்டுநர்களுக்குவழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசுரூ.20,000/-லிருந்து ரூ.25,000/- ஆகஉயர்த்தப்படுகிறது.இவ்வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்குஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவாகும்.

மேல்நிலைப் பள்ளித் தேர்வில் (+2)ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும்முதலிடம் பெற்ற முதல் 10 போக்குவரத்துத் தொழிலாளர்கள் குழந்தைகளின் ஒரு மேல்படிப்பிற்கான கல்விக் கட்டணம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி திரும்பவழங்கப்படும். இத்திட்டத்தினால் எட்டுபோக்குவரத்துக் கழகங்களில் 80 மாணவ,மாணவியர்கள் பயனடைவார்கள். இவ்வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்குஆண்டு ஒன்றுக்கு ரூ.35 இலட்சம் செலவாகும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில்பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்தங்களின் உரிமங்களைப் புதுப்பிக்கும் போது செலுத்தும் கட்டணம்தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அவர்களுக்குதிரும்ப வழங்கப்படும். இவ்வகையில்,போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுஒன்றுக்கு ரூ.57 இலட்சம் செலவாகும்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில்அமைந்துள்ள சாலை போக்குவரத்துநிறுவனத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும்மருத்துவமனையினை மேம்படுத்த முதலமைச்சர் அம்மாவின் ஆணையின்படி, ரூ.3.16 கோடி செலவில் புதியமருத்துவ உபகரணங்கள் சாலை போக்குவரத்துநிறுவன நிதியுதவியுடன் வாங்கப்படும். ஈரோட்டில் அமைந்துள்ள சாலை மற்றும்போக்குவரத்து தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியை மேம்படுத்தும் பொருட்டுமுதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, கணினிஉள்ளிட்ட புதிய தொழில் நுட்ப உபகரணங்கள்ரூ.1.79 கோடி செலவில் சாலை போக்குவரத்துநிறுவன நிதியுதவியுடன் வாங்கப்படும்.இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்