முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றுமதியை அதிகரிக்க கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: நிர்மலா சீதாராமன் உறுதி

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் இந்திய இன்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (இஇபிசி) வைர விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் கூறியது: தேக்க நிலையிலிருந்து மீண்டு இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியப் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அரசு நன்கு அறியும்.

ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டையாகத் திகழும் கட்டமைப்பு குறைகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கும்.  மேக் இன் இந்தியா திட்டத்துக்காக 305 கோடி டாலர் வரையிலான முதலீட்டு ஆலோசனைகள் அரசுக்கு வந்துள் ளன. இதுவே பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

  மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக, இந்தியாவை சர்வதேச உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதே இத்திட் டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.  வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார சூழல் சரியாக இல்லை. பணவீக்கம் மற்றும் கரன்சி மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை நிலவுவதால் டாலரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்று ரீட்டா குறிப்பிட்டார். உயர் மதிப்பிலான பொருள்கள் சந்தையில் இந்திய தயாரிப்புகளின் பங்களிப்பு வெறும் 1.2 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago