முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்கறிகளுக்கு கேரளா தடையில்லை: அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் இருந்து நாளொன்றுக்கு 250 லாரிகள் மூலம் சுமார் 80 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருவதாகவும், தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடை இல்லை என்றும் வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

தமிழக சட்டசபையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் 14 கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இதன் மீது நாகை மாலி, ஆறுமுகம் ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதிலளித்து அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதாவது:-

கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் அனுப்பட்டுத்தான் வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தி ஆகும் காய்கறிகள் மற்றும் பழங்களின் அதிக அளவில் பூச்சி கொல்லி மருந்துகளின் தாக்கம் உள்ளதாக தேவையற்ற, அச்சம் தரும் நடவடிக்கைகள் கேரள அரசால் மேற்கொள்வது எந்தவிதத்திலும் சரியல்ல. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை.இந்த காய்கறிகளில் 117 மாதிரிகளை ஆய்வு செய்ததில் 5 மாதிரிகளில் மட்டும் 1.4 சதவிகிதம் நச்சுதன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய அளவில் 2.7 சதவீதம் நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே 1.4 சதவீத நச்சுத்தன்மையால் எந்தவித பாதிப்பும் இல்லை.கேரளாவில் விளைவிக்கப்படும் ஏலக்காயில் 123 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 63 மாதிரிகளில் அதிக அளவு நச்சுதன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதர மாநிலங்களில் உற்பத்தி ஆகும் காய்கறி மற்றும் பழங்களை காட்டிலும் தமிழகத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எந்தவிதத்திலும் குறைந்தல்ல என்பதோடு அனைத்து விதத்திலும் இது பாதுகாப்பானதே.எனவே கண்டறியப்படாத சந்தேகத்தை காரணம் காட்டி தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு எடுத்து செல்லும் காய்கறி மற்றும் பழங்கள் குறித்து கேரள மாநிலத்து அலுவலர்கள் தேவையற்ற எச்சரிக்கைகள் விடுவதையும், கட்டுப்பாடுகள் திணிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு கொள்ளும்.தற்போது கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் தங்கு தடையின்றி தினசரி அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் உரிய விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறி மற்றும் பழங்கள் குறைவு ஏதுமின்றி வழக்கம் போல் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை துறை நச்சுத்தன்மை இல்லாத உணவு உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை கிராமங்களை உருவாக்குதல் என்ற திட்டத்தினை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி நச்சுதன்மையற்ற பயிர்களை சாகுபடி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் ரூ. 8.50 கோடி மதிப்பீட்டில் இந்த பூச்சி மருந்துகள் தொடர்பான ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 68 ஆய்வகங்களில் தமிழகத்தில் மட்டுமே 18 ஆய்வகங்கள் உள்ளன. நஞ்சு இல்லாத பாதுகாப்பான உணவினை அளித்திடும் நோக்கத்தில் உரிய பயிரில் சரியான தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தை சரியான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தி பூச்சி நோயினை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விஷயத்தை பொறுத்தவரை கேரளாவைச் சேர்ந்த வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் ஒரு புதிய திரவத்தை கண்டுபிடித்துள்ளார்.

இந்த திரவத்தில் காய்கறிகளை கழுவினால் அதனுடைய நச்சுதன்மை போய் விடும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது தான் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.ஆனாலும் கூட இப்போது 250 லாரிகள் மூலம் 800 டன் அளவிற்கு காய்கறிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago