முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரிப்பு பணி தீவிரம்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      தமிழகம்

சென்னை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக உணவுத்துறை அமைச் சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கூட்டு றவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி.டில்லிபாபு, ‘‘ஸ்மார்ட் ரேஷன் அட்டை எப்போது வழங் கப்படும்? பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.அப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குறுக்கிட்டு பேசியதாவது:கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100 ரொக்கம், ரூ.60 மதிப்புள்ள அரிசி, சர்க்கரை என மொத்தம் ரூ.160 மதிப் புள்ள பொங்கல் பை வழங்கப் பட்டது. குறிப்பிட்ட ஆண்டில் ஏற்படும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட இயலாத நிலையை தவிர்க்கும் வகையில் தேவை அடிப்படையில் பொங்கல் பை வழங்கப்படுகிறது.தற்போது இருக்கும் ரேஷன் கார்டுகளை மாற்றி ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் திட்டத்துக்காக ரூ.318 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சோதனை அடிப் படையில் சென்னை, திருச்சி மாவட் டங்களில் 39 ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்