முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42பேர் கொண்ட இலங்கை அமைச்சரவை பதவியேற்றது

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு, 42 உறுப்பினர் கொண்ட இலங்கை அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் 3தமிழர்கள் மற்றும் 4முஸ்லீம்கள் இடம் பெற்றார்கள்.

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இலங்கை சுதந்திரா கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 31அமைச்சர்களும் சுதந்திரா கட்சியைச்சேர்ந்த 11அமைச்சர்களும் நேற்று பதவியேற்றார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது பதவியேற்றுள்ள அமைச்சரவையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 3பேரும் முஸ்லீம் சமூகத்தைச்சேர்ந்த 4பேரும்  இடம் பெற்றார்கள். அமைச்சரவையில் இரு பெண்களும் இடம் பெற்றார்கள். அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.கடந்த 10நாட்களுக்கு முன்னர் மங்கள சமர வீர வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார் .இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி மைத்ரி பால சிறி சேனா உள்ளார்.

இலங்கை கேபினட் அமைச்சர்கள் 48உறுப்பினர்களுக்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதர இலாகா அமைச்சர்கள் 45உறுப்பினர்களுக்கு மேல் அதிகரிக்காமல் இருக்கவும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் பொறுப்பாக நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.அதனையடுத்துஅவரது கட்சியை சேர்ந்த ஜான் அமரதுங்க சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்துவ விவகார துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ் பிரதிநிதிகளான டி.எம். சுவாமிநாதன், பழனி திகம்பரம், மற்றும் மனோ கணேசன் ஆகியோர்  அமைச்சர்களாக பின்னர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago