முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: கோயம்பேட்டில் 14–ந்தேதி சிறப்பு சந்தை திறப்பு

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை 17–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மலர் அங்காடி பின்புறம் வருகிற 14–ந்தேதி முதல் 18–ந் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெற உள்ளது.

இந்த சந்தையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பொருட்களான பொரி, கரும்பு, பூசணிக்காய், மாவிலை தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த சிறப்பு சந்தைக்கு வரும் வாகனங்களிடம் இருந்து நுழைவுக் கட்டணம், பொருட்களை வியாபாரம் செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் பணிக்கான ஏலம் வருகிற 9–ந்தேதி மாலை 3 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகத்தில் வைப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 62 ஆயிரத்து 650. அதிகபட்ச ஏலம் எடுத்த நபர், ஏலத் தொகையுடன் உரிய வரிகள் சேர்த்து முழுவதுமாக 10–ந்தேதி காலை 10 மணிக்குள் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

பண்டிகை கால பொருட்களை விற்பனை செய்வோர் ஏலதாரரிடம் தினந்தோறும் அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டு 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லத்தக்கது.

அனுமதி சீட்டு இல்லாமல் வியாபாரம் செய்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று முதன்மை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்