முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு நிலம் கொடுத்தால் சென்னையில் திருப்பதி கோவில்

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னை வந்தார்.
தியாகராயநகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள கமிட்டி உறுப்பினர்களுடன் கோவில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது. தற்போது வாரந்தோறும் 7500 லட்டு பிரசாதம் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விரைவில் லட்டு விற்பனை 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது வாரம் 16 ஆயிரம் லட்டுகள் விற்கப்படும்.
திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி மெதுவாக நடப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அங்கு சென்று பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையிலும் திருப்பதி கோவில் கட்டுவதற்கு அரசு இடம் தந்தால் அதனை விலைக்கு வாங்கி கோவில் கட்டுவதற்கு தேவஸ்தானம் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தி.நகர் திருப்பதி தேவஸ்தான தலைவர் அனந்தராமர் ரெட்டி உடன் இருந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்