முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் பாபியோ போக்னினி 3வது சுற்றில் வெற்றி பெற்றார். அவர் பிரபல ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை வீழ்த்தினார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்று போட்டிநேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியும் ஸ்பெயினின் பிரபல வீரர் ரபேல் நடாலும் மோதினர்.

இந்த போட்டியில் நடால் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி முன்னணியில் இருந்த போதும் இறுதி கட்டத்தில் பாபியோ கடுமையாக ஆடி வெற்றி வாகை சூடினார். அவர்3-6 ,4-6, 6-4 6-3, 6-4செட் கணக்கில் வெற்றி பெற்றார். நான் முதல் இரு செட்டுகளை இழந்த போதும் பின்னர் நடந்த செட்டுகளில் மன உறுதியுடன் ஆடினேன். அதனால் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனது மன உறுதிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை கருது கிறேன் என்று பாபியோ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த போட்டியில் ஆடிய நடால் 8வது நிலை வீரராக இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி வந்த நடால் இந்த ஆண்டு எந்த ஒரு கிராண்ட் சிலாம் டென்னிசிலும் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவி இருக்கிறார். அவர் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதியிலேயே தோல்வியை தழுவினார். இதனையடுத்து நடந்த பிரெஞ்சு ஓபன் கிராண்ட்சிலாம் போட்டியிலும் அவர் கால் இறுதியுடன் வெளியேறினார். அதனைத்தொடர்ந்து புல் தரையில் நடைபெறும் விம்பிள்டன் கிராம் சிலாம் டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றிலேயே அவர் தோல்வியைத்தழுவினார்.

நடால் ஒரு கட்டத்தில் உலகின் நம்பர் ஓன் வீரராக திகழ்ந்தார். ஆனால் அவர் இந்த ஆண்டு இறுதியில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தனது நம்பிக் கை இழப்பு காரணமாகவே தோல்வியை தழுவியதாக 29வயது வீரர் நடால் ஒப்புக் கொண்டார். கடந்த 2ஆண்டுகளில் நான் மோசமாகவே ஆடி வந்துள்ளேன். அதேப்போன்று இந்த போட்டியிலும் மோசமாக ஆடி தோற்றுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். நடால் 14 பெரும் போட்டிகளில் சாம்பியன் ஆகியுள்ளார். இதில் அவர் 2முறை அமெரிக்க ஒபன் போட்டியில் சாம்பியனாகி இருந்தார்.அவர் இந்த அமெரிக்க ஓபனில் கடந்த 2010ம்ஆண்டும் 2013ம் ஆண்டும் சாம்பியன் ஆகி இருந்தார். அவர் 2011ம்ஆண்டு இறுதி போட்டியில் தோல்வியைத்தழுவினார்.அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2012ம்ஆண்டும் கடந்த ஆண்டும் அவர் இந்த அமெரிக்க ஓபன் போட்டியில் ஆடவில்லை. தனது விளையாட்டுத்திறனில் பிரச்சினை இருந்ததால் தோல்வியைத்தழுவினேன் என்று அவர் ஒப்புக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago