முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய ஷேன் வாட்சன் ஓய்வு

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டரில் தெரிவித்தது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அறிமுகமானார்.

இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176.  75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா தோற்ற ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு மிட்செல் மார்ஷிடம் இவர் தன் இடத்தை இழந்தார். இவர் போட்டிகளில் ஆடும்போது  அதிகம் முறை எல்.பி.ஆகியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை பொறுத்தவரையில் குறைந்த ஸ்கோரில் ஒரே முறையில் அதிகம் ஆட்டமிழந்தால் அவர்களது பந்தய வாழ்க் கை முடிவுக்கு வருவது வழக்கம், அந்த வகையில் இவரது டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

"டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சவாலாகத் திகழும் அளவுக்கு என்னிடம் மனோபலம் இல்லை. உத்தி ரீதியாகவும் வலுவாக இல்லை, எனவே ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதை முடிவு செய்தேன்" என்றார் ஷேன் வாட்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago