முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பயஸ்,ஹிங்கிஸ் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 10 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டிக்கு லியான்டர் பயஸ் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.
புதன்கிழமை நடைப்பெற்ற அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லியான்டர் பெயஸ் சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்ஸ் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபன்னா ஜோடியை எதிர்கொண்டது.

சுமார் 61 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் லியான்டர் பயஸ் ஜோடி ரோகன் போபன்னா ஜோடியை 6 -2, 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் நேர் செட்டில் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதிப் போட்டியில் லியான்டர் பயஸ் ஜோடி பெத்தனி மட்டக் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்