முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி  - திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 16-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  வரும் 24-ம் தேதி முதல் 9 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  வாகன சேவைகளை பக்தர்கள் கண்டுகளிக்க 4 திருமாட வீதிகளிலும், கோயில் முகப்பு கோபுரம் முன்பும் இரும்பு தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டுள்ளன.  பக்தர்கள் தங்கும் இலவச சத்திரங்கள் மற்றும் விடுதிக ளில் மராமத்து பணிகள் நடைபெறுகின்றன.

குடிநீர், மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றிலும் தேவஸ் தானம் தனி கவனம் செலுத்தி வருகிறது.  பக்தர்களுக்கு இலவச அன்ன பிரசாதம் வழங்க நன்கொடையாளர்களிடம் கூடுதலாக காய்கறிகள் வழங்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தொடர்ந்து இலவச அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது.  பாதுகாப்புப் பணியில் கூடுதலாக 3,000 போலீஸார் ஈடுபட உள்ளனர். மேலும், ஆயுதப்படை, ஆக்டோபஸ் கமாண்டோக்கள், தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊர்காவல் படையினர் என சுமார் 5 ,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் வாகன சேவையை காண வரும் பக்தர்களுக்காக கோயில் முன் தடுப்பு கம்பிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.பிரம் மோற்சவ நாட்களில் 2 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago