முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை ரொபர்ட்டோ வின்ச்சியிடம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் 4-வது டென்னிஸ் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில்  வின்ச்சியிடம், 2-6, 6-4, 6-4 என்ற செட்களில் செரீனா தோல்வியுற்றது பெரும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இத்தாலியின் வின்ச்சிக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வின்ச்சி ஒரு இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட்.

உலகத் தரவரிசையில் 43-வது இடமே இவருக்கு உள்ளது. செரீனா தோற்க வாய்ப்பேயில்லை என்றே கருதப்பட்டது.  16 ஏஸ் சர்வ்களை செரீனா அடித்தாலும், 4 டபுள் பால்ட்கள் மற்றும் 26 திடீர் தவறுகள் ஆகியவை ஆட்டத்தின் மிக முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்தது என்பதே செரீனாவின் பின்னடைவுக்குக் காரணம்.  மேலும் வின்னர்கள் கூட செரீனா 93, வின்ச்சி 85 என்றே இருக்கிறது, அப்படியிருந்தும் மிகவும் அனாயசமாக வின்ச்சி வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வலைக்கு அருகில் 25 முறை வந்து ஆடிய வின்ச்சி 18 முறை அதில் வெற்றி கண்டார். ஆனால் செரீனா பேஸ்லைனிலேயே தேங்கி விட்டார். 2வது செட்டில் மிகவும் நிதானமாக செரீனா கடைசியில் பேக் ஹேண்ட் ஷாட் ஒன்றை அலட்சியமாக ஆடி அது சரியாக அமையாமல் செட்டைக் கோட்டை விட்டார். தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி அடித்து அதற்கு ஒரு எச்சரிக்கையும் அவருக்கு விடுக்கப்பட்டது. இதனையடுத்து உத்வேகத்துடன் விளையாடிய வின்ஸ் 3-வது செட்டையும் கைப்பற்றி வெற்றிபெற்று செரீனாவுக்கு அதிர்ச்சியளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago