முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் டெல்லாகுவா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடியை எதிர்கொண்டது.

மொத்தம் 1 மணி நேரம், 10 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 2வது பட்டம் வென்றது. இதற்கு முன், சமீபத்தில் முடிந்த விம்பிள்டனில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சானியா பெறும் 5-வது கிராண்ட் ஸ்லாம் டைட்டில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago