முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் தர வரிசை: இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: உலக டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து) 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ங்கிசு ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். மேலும் இந்த ஆண்டில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா கைப்பற்றும் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதுவரை அவர் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவரை வென்றுள்ளார்.

இந்நிலையில், உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்தது. இந்த பட்டியலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா கிங்ஸ் 2 வது இடத்திலும் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி 125 வது இடத்தை பிடித்துள்ளார். சோம்தேவ் 12 இடங்கள் பின்தங்கி 164-வது இடத்தை பெற்றுள்ளார்.  ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 13 வது இடத்திலும், லியாண்டர் பெயஸ் 33-வது இடத்திலும் இருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்