முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் ஹங்சோவு நகரத்தில் 2022ம் ஆண்டு ஆசிய போட்டி நடக்கிறது

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

அஷ்காபாத்: சீனாவின் ஹங்சோவு நகரத்தில் வருகிற 2022ம்ஆண்டு ஆசிய போட்டி நடைபெறுகிறது.இதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளும் ஹங்சோவு நகர நிர்வாகிகளும் கையெழுத்திட்டார்கள். ஆசிய போட்டியை நடத்தும் ஹங்சோவு கடலோர நகரம் 90லட்சம் மக்கள் தொகையை கொண்டது. அந்த நகரத்தின் நிர்வாகிகள் ஆசிய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து துர்க் மேனிஸ்தான் நகரில் நடந்த சந்திப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

சீனாவின் ஹங்சோவு நகரம் ஆசிய போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த ஒரே நகரமாக களத்தில் இருந்தது. அந்த நகரம் எங்களது பல இலக்குளை பூர்த்தி செய்வதாகவும் இருந்தது என்று ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஷேக் அகமது அல் -பகத் அல் சபாதெரிவித்தார்.ஹிங்சோவு நகரம் பெரும் வளர்ச்சி பெறுவதற்கு ஆசிய விளையாட்டு போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என்று ஹங்சோவு நகர மேயர் சோங் ஹாங்மிங் தெரிவித்தார். ஆசிய போட்டியை நாங்கள் உயரிய அளவில் நடத்துவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

2022ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியை சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நடத்துகிறது. சீனாவில் நடத்தப்படும் மிகப்பெரும் போட்டியாக இந்த ஒலிம்பிக் போட்டி இருக்கும்.கடந்த 1990ம்ஆண்டு பெய்ஜிங்கிலும் 2010ம்ஆண்டு குவாங்சோவு நகரிலும் சீனா ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தியது.

அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த வியட்னாமில் உள்ள ஹனோய் நகருக்கு 2019ம் ஆண்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக போட்டியை நடத்த முடியாத நிலை உள்ளது என வியட்னாம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை த்தொடர்ந்து இந்த போட்டி இந்தோனேசியாவில் நடக்கிறது.

2019ம் ஆண்டு இந்தோனேசியாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிய போட்டி நடத்த முடியாது என ஒரு ஆண்டு முன்னதாக அந்த போட்டியை இந்தோனேசியா நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்