முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி ஒரு சிறந்த ஆல் ரவுண்டர்: குளூஸ்னர் புகழாரம்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் - சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் டோனி சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்துவருகிறார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று டி-20, 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 2 ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர் கூறுகையில், 

உலக கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் டோனிதான், என்னை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர்கள் உண்மையான ஆல்ரவுண்டர்களே. அந்த வகையில் டோனி, கில்கிறிஸ்ட் சிறந்த வீரர்கள் ஆவார்கள் என்றார். ஸ்டெய்ன், மார்னே மார்கல், பிலாண்டர் ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் எங்கள் வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள், அதே போல் எங்களது வேகப்பந்து வீச்சளர்களும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்றார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக விளையாடியதை தென் ஆப்பிரிக்க அணி கவனத்தில் கொண்டு திட்டமிட்டு விளையாடும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்