முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியில் குர்கீரத்-அரவிந்த்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: பஞ்சாப் மாநிலத்தின் இளம் ஆல்ரவுண்டரான குர் கீரத் சிங்கும் கர்நாடக மாநிலத்தின் இளம் இடது கை பந்து வீச்சாளருமான ஶ்ரீநாத் அரவிந்தும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆடும்இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி  இந்திய அணியுடன் 3 டி-20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும்  ஆடுகிறது. இந்த போட்டிகளில் ஆடும் இந்திய அணியை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது.இந்த இரு அணிகள் இடையே மோதும் முதல் போட்டி அக் டோபர் 2ம் தேதியன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக பந்து வீசிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தென் ஆப்பிரிக்காவுடன் ஆடும் டி-20போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் அக்சர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினார். அவர் அந்த போட்டிகளில்சிறப்பாக ஆடியதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு இலங்கை க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் போதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் தென் ஆப்பிரிக்காவுடன் ஆடும் இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளிலும் டி-20போட்டிகளிலும் ஆடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே தொடரின் போது ஓய்வில் இருந்த மூத்த வீரர்கள் விராத் கோலி,ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ,சுரேஷ் ரெய்னா, ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார்கள். அம்பாடி ராயுடு மற்றும் மொகித் சர்மா ஆகியோரும் அணியில் இடம்பிடித்தார்கள். தென் ஆப்ரிக்காவுடன் ஆடும் ஒரு நாள் போட்டியில்  உமேஷ்யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட வில்லை. வருண் ஆரோன் இந்திய அணியில் இடம் பெற தேர்வுசெய்யப்பட வில்லை.

தென் ஆப்ரிக்காவுடன் டி-20போட்டியில் ஆடும்  இந்திய அணி விவரம்:(3போட்டிகள்) எம்.எஸ் டோனி(காப்டன்) ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு, அஜின் கியா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, ஆர்.அஸ்வின், அக்சர் படேல், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர்குமார், மொகித் சர்மா, அமித் மிஸ்ரா, எஸ்.அரவிந்த் ஆகியோர் ஆவார்கள். தென் ஆப்ரிக்க அணியுடன் ஆடும் ஒரு நாள் போட்டிகளில் ஆடும் இந்திய அணி:(3போட்டிகள்)

எம்.எஸ்.டோனி(காப்டன் -விக் கெட் கீப்பர் ) ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, அம்படி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜின்கியா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, ஆர்.அஸ்வின்,,அக்சர் படேல், குர்கீரத் சிங் மான், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார்,மொகித் சர்மாக மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்