முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது வீழ்ச்சியை பிரதமர் மோடி தானே தேடிக் கொள்கிறார் : ராகுல் காந்தி ஆவேசம்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

மதுரா - தனது வீழ்ச்சியை  பிரதமர் மோடி தானே ஏற்படுத்திக் கொள்கிறார் என்று  காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மதுரா கூட்டத்தில் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றுபட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரிடமும் காங்கிரசின் மரபணு மற்றும் தத்துவார்த்துவம் நிறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போதும் முதலிடத்தில்தான் இருக்கிறது.

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அவர் தன்னைத்தானே சேதப்படுத்திக் கொள்கிறார். காங்கிரஸ் கட்சி அவரை சேதப்படுத்துவதை காட்டிலும் அவராக தனது வீழ்ச்சியை தேடிக் கொள்கிறார். விவசாயிகளுக்கு இனி நல்ல நாட்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். ஆனால்  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மோடியை விவசாயிகள் நிந்திக்கிறார்கள். அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதை காட்டிலும் நிந்திக்கிறார்கள் என்பதுதான் சரியானதுதாகும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வில்லை. 3முறை வாக்குறுதிகளை அளித்த போதும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஒரே தகுதி ஒரே ஓய்வுதியத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வில்லை. மோடி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார்.

நாம் நமது  இடத்தை அடைய வேண்டும். மோடி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அந்த இடத்தை நாம்தான் நிரப்ப வேண்டும். நீங்கள் மோடியை தாக்கலாம். ஆனால் மோடி தன்னைத்தானே தாக்கிக் கொள்கிறார்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி வேறுபட்டது ஆகும். காங்கிரஸ் கட்சி  ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக இருந்தால் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வந்து வானம் கறுப்பாக இருக்கிறது என்று கூறுவார்..அப்போது  நீங்கள் அனைவரும் ஆமாம் வானம் கறுப்பாக இருக்கிறது என்று கூறுவீர்கள் என்று  ராகுல்காந்தி விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்