முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம்: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி சவால்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

அமேதி, ராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி அறக் கட்டளை விவகாரம் தொடர்பாக உத்திரபிரதேச காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் விவகாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார்.

ராகுல் காந்திக்கு துணிவிருந்தால் என்னை சிறையில் அடைக்கட்டும் பார்க்கலாம் என்று அவர்கூறியுள்ளார். அமேதியில் விவசாயிகளின் நிலத்தை ராஜீவ் காந்தி அறக் கட்டளை அபகரித்துள்ளது என ஸ்மிருதி கூறியதற்கு எதிராக உ.பி. மாநில காங்கிரஸ் சார்பில் அவருக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமேதி தொகுதிக்குட்பட்ட குங்வாஜ் என்ற கிராமத்தில் ஞாயிற்று கிழமை நடந்த கூட்டத்தில் ஸ்மிருதி பேசியதாவது:
அமேதியில் ராகுல்காந்தி அல்லது நேரு குடும்பத்தை பற்றி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. நான் தொடர்ந்து அமேதிக்கு வந்து செல்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டுப் பெண்கள் பலவீனமானர்கள் என்று காங்கிரஸ் கட்சியோ அல்லது ராகுல் காந்தியோ கருதினால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அமேதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

ராகுல் காந்திக்கோ, காங்கிரசுக்கோ துணிவிருந்தால் என்னை சிறையில் அடைக்கட்டும். நான் அமைதி காக்க மாட்டேன். அமேதி மக்களுடனான எனது உறவு தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எப்போதும் தொடரும். இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்