முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அரசுடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்கிறது: வைகோ குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30 ஆவது அமர்வில் மனித உரிமை ஆணையர் அல் சையத் ராஃப் உசேன் தாக்கல் செய்த 19 பக்க அறிக்கையும், 2014 இல் மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஆஇமா ஜஹாங்கீர் ஆகிய மூவர் குழுவின் 268 பக்க அறிக்கையும், இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை உண்மைகளை ஓரளவு வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு, நீதிக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது.அதனை அடியோடு நாசம் செய்யும் விதத்தில் அமெரிக்க அரசு தற்போது வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. அந்த வரைவுத் தீர்மானம் இலங்கையின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் சதி செய்து அமெரிக்க அரசு முன்வைத்துள்ள அயோக்கியத்தனமான தீர்மானம் ஆகும்.இதில் கலப்பு விசாரணை என்ற சொல் கூட இல்லை. சிங்கள அரசாங்கமே உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள், நீதிபதிகளை அதில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை உடனே வெளியேற்றுவதற்கான ஏற்பாடோ, சிங்கள குடியேற்றங்களை முற்றாக அகற்றுவதற்கான ஏற்பாடோ எதுவும் சொல்லப்படவில்லை. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளிடம், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் தமிழர்கள் மீதான எள்ளளவு இரக்கமும் இல்லை. இந்தப் பின்னணியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெற இருக்கும் தீர்மான வாக்கெடுப்பில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படும்.தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய அரசு செயல்பட போகிறதா? அல்லது வழக்கம் போல தமிழர்களுக்குத் துரோகம் செய்யப் போகிறதா? என்பதை தமிழ்க்குலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்