முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு கண்காட்சி விற்பனை

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை ஒட்டி சிறப்பு விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 11 மண்டலங் களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கடைகளில் சிறப்பு விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது. வெளி மாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட 15 நகரங்களிலும் சிறப்பு கண்காட்சி வரும் அக்டோபர் 1 முதல் நவம்பர் 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சிகளில் காஞ்சி பட்டு புடவைகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு சிறப்பு கண்காட்சிகளில் காஞ்சி பட்டு புடவைகளை விற்பனை செய்வதற்கென, காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், முருகன் பட்டு கூட்டுறவு சங்கம், காமாட்சி பட்டு கூட்டுறவு சங்கம், திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்கம், கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் சிறந்த வேலைப்பாடு கள் மற்றும் பாரம்பரிய வடிவ மைப்புகளுடன் கூடிய பட்டு புடவைகளை தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், துணைத் தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் விற்பனைக்கு தேவையான பட்டு புடவைகளை தேர்வு செய்தனர்.புகழ்பெற்ற இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் நோக்கில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் ‘எம்.எஸ்.புளூ’ என்ற, அவர் விரும்பி அணிந்த பாரம்பரிய பட்டு சேலை உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டு, தயாரான முதல் பட்டு சேலையை மேலாண் இயக்குநர் வெங்கடேஷ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கடந்த ஆண்டு தசரா மற்றும் தீபாவளி சிறப்பு கண்காட்சி விற் பனை ரூ.129 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.150 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது’ என்றார்.சிறப்பு கண்காட்சிக்காக ரூ.40 லட்சத்துக்கு காஞ்சி பட்டு புடவைகள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்