முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் பயிற்சி

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

சண்டிகர்: தென் ஆப்பிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக, இந்திய வீரர்களுக்கு, ராணுவ பயிற்சிக்கு ஒத்த கடும்பயிற்சி அளிக்கப்படுகிறதாம். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி20 கிரிக்கெட், 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட ஒரு தொடரில் ஆட உள்ளது. இந்திய அணியை பொறுத்தளவில், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்க, இந்திய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் சிலவற்றை இரு நாட்கள் அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அணி இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்த ஐடியாவை கொடுத்துள்ளதாக தெரிகிறது. தடைகளை தாண்டுவது, மலையேற்றம் போன்ற பயிற்சிகள் இந்திய வீர்ர்களுக்கு அளிக்கப்படுகிறது. முதல் டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி தர்மசாலா மலை நகரில் நடக்க உள்ளது.

இதையொட்டி 7 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் வைத்தும், இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 26ம் தேதியோடு பெங்களூரில் வழக்கமான பயிற்சியை முடித்த இந்திய அணி, 30ம் தேதி சண்டீகர் செல்வதாக இருந்தது. ஆனால் சிறப்பு பயிற்சிக்காக நேற்றே சண்டீகர் சென்றுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்