முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 9 பிரச்சார கூட்டங்களில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, பீகார் சட்டமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி  9பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி 4கூட்டங்களில் பங்கேற்கிறார்.

பீகார் மாநிலத்தில் வருகிற அக் டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 5கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சியும் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி புதியதாக ஆரம்பித்துள்ள கட்சியும் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை எதிர்த்து பீகாரில் ஆட்சி செய்யும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்  லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும்  மகா கூட்டணி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என ஜனதா பரிவார் கட்சிகள்இந்த  மகா கூட்டணியை அமைத்து இருக்கின்றன.

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி 9பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கிறார்.
அசாதுதீன் ஒவாசியின் எம்.ஐ.எம் கட்சி மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி க்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலில் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி அக் டோபர் 7,26மற்றும் அக் டோபர் 30ம்தேதிகளில்  ராகுல் காந்தி பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தினமும் 3 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். பீகார்மாநிலத்தில் 5வது இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 5ம்தேதியன்று நடைபெறுகிறது.  அப்போது 57சட்ட மன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிஷன் கன்ஜ் மற்றும் கதிகர் மாவட்டங்களில் கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த இரு மாவட்டங்களில் அதிக அளவில் முஸ்லீம்  மக்கள் உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சீமான்ச்சல் பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை எம்.ஐ.எம் கட்சியின் ஒவாசி பீகார் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.அவர்தனதுகட்சியின் சார்பாக வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். அவரது இந்த முடிவு மதச்சார்பற்ற ஜனதா மகா கூட்டணிக்கு அதிக இடங்களை பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதனைத்தவிர என்.சி.பி கட்சியின் தாரிக் அன்வர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான 3வது அணியில் உள்ள 6கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago