முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனாபோரா கொலை வழக்கு: இந்திராணி உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: ஷீனாபோரா கொலை தொடர்பாக அவரது தாயார் இந்திராணி உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திராணி ஷீனாவுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரபல தனியார் தொலைக் காட்சியின் முன்னாள் தலைமை செயல் இயக்குநர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி, ஏற்கெனவே 2 முறை திருமணமான அவர், தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த ஷீனா போரா, மைக்கேல் போராவை சகோதர, சகோதரிகள் என்று கூறிவந்தார்.

பீட்டர் முகர்ஜியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த ராகுல் முகர்ஜியும் ஷீனாபோராவும் திருமணமாகாமல் மும்பையில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2012 ஏப்ரல் 24-ல் ஷீனாபோரா மாயமானார். அவர் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக இந்திராணி அனை வரையும் நம்பவைத்தார்.  இந்தப் பின்னணியில் திடீர் திருப்பமாக ஷீனாபோராவை கொலை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த ஆகஸ்ட் 25-ல் இந்திராணி, அவரது டிரைவர் ஷியாம் ராய், 2-வது கணவர் சஞ்சய் கன்னா ஆகியோரை மும்பை போலீஸார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் சொத்து, பணப் பிரச்சினை காரண மாக பெற்ற மகளை அவரது தாயார் இந்துராணி கொலை செய்திருப்பது தெரியவந்தது. எனினும் பல்வேறு மர்மமுடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியா கடந்த 8-ம் தேதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக அகமது ஜாவித் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பீட்டர் முகர்ஜிக்கு மிகவும் நெருக்க மானவர். இதனால் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி ஷீனாபோரா வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு இந்துராணி, ஷியாம் ராய், சஞ்சய் கன்னா ஆகியோர் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில்,  சி.பி.ஐ க்கு மாறியுள்ள ஷீனா போரா கொலை வழக்கை இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். சிபிஐ அதிகாரிகள் இந்திராணி முகர்ஜி, சஞ்சீவ் கன்னா மற்றும் ராய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஷீனா வழக்கை ராஜஸ்தானைச் சேர்ந்த லதா மனோஜ் குமார், நினா சிங் ஆகிய பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்