முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரி கோம்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறப் போவதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். டார்ஜிலிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மேரி கோம், தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அப்போது அது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நான் ஓய்வு பெறுவதற்கு ரியோ ஒலிம்பிக் போட்டிதான் சரியான தருணம்.

கடவுளின் அருளால் குத்துச் சண்டை போட்டியில் நிறைய சாதித்துவிட்டேன். ஒலிம்பிக் போட்டி யில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவு இன்னும் நிறைவேறவில்லை என்றாலும், ரியோ ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதற்கு மனதளவில் என்னை தயார்படுத்திவிட்டேன் என்றார்.

உலக குத்துச்சண்டை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம், தனது ஓய்வுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உலகம் முழுவதிலும் கடுமையான போட்டிகள் இருப்பதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது என்பது மிகமிக கடினமான விஷயமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மனதளவிலும், உடலளவிலும் என்னை தயார்படுத்திக் கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

அதற்காக நீண்ட நாட்களாக எனது வீட்டையும், குடும்பத்தினரையும் பிரிந்திருக்கிறேன் என்றார் மூன்று குழந்தைகளின் தாயான மேரி கோம் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், ஓய்வுக்குப் பிறகு எனது குத்துச்சண்டை அகாடமியில் முழு நேரத்தையும் செலவிடவிருக்கிறேன் என்றார்.  இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிய மேரி கோம், ஒரு பெண்ணாக, அம்மாவாக இருக்கும் என்னால் சாதிக்க முடியும் என்றால் உங்களால் ஏன் சாதிக்க முடியாது.

கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழையுங்கள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமானால் ஒழுக்க முள்ளவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும், ஆற்றல் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும். சாதிக்க நினைப்பவர் கள் ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருப்ப தோடு, நிறைய விஷயங்களை தியாகம் செய்யக்கூடியவர்களாக வும் இருக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்