முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில்புரிவோர்களுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை 969 நபர்களுக்கு வழங்கும் அடையாளமாக, முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான சாவிகளை வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில்புரிவோர், வீட்டிலிருந்து எளிதில் கல்வி நிலையங்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் சென்று வர அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பேட்டரியால் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு மாற்றாக, பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்கள் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, 2011-2012-ஆம் நிதியாண்டில், 2 கோடி ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்களை, கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.  மேலும், 2012-2013-ஆம் நிதியாண்டில், 2 கோடி ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 370 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2013-2014-ஆம் நிதியாண்டில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 985 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 2014-2015-ஆம் நிதியாண்டில், 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 969 பெட்ரோல் ஸ்கூட்டர்களை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில்புரிவோர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் சாவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 29 ம்தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் . முகமது நசிமுத்தின், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் டாக்டர் க. மணிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற்றுக் கொண்ட கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.i

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago