முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோம்: ஜனாதிபதி முகர்ஜி

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் அவர் கூறியிருப்பதாவது, தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி போதித்த சகிப்புத்தன்மை, அகிம்சை, மற்றும் அமைதி போன்ற கொள்கைகளை பின்பற்றவும் அதற்காக நம்மையே அர்ப்பணிக்கவும் இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.தேசப்பிதா காந்திஜி ஒரு மா மனிதர்.

அவர் மறைந்த போது விளக்கு மறைந்து விட்டது, ஆனாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் ஒளி வீசும் என்று பண்டித ஜவகர்லால் நேரு சொன்னார். நமது நாடு பலவிதமான கலாச்சாரங்கள், பல மொழிகள் , பல மதங்களை கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமது வழக்கம். இந்த நாளில் அண்ணலின் போதனைகளை பின்பற்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.அவரது போதனைகளை நாம் செயல்படுத்த வேண்டும் . சவால்களை சந்தித்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்