முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 8 அணிகள் தேர்வு

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - மினி உலக கோப்பை என கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்க 8 அணிகள் தகுதிப்பெற்றுளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்க, 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தை பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டன. அதேநேரம் வங்கதேசம் அவ்வாய்ப்பை பெற்றுள்ளது. மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 30ம் தேதிய நிலவரப்படி ஐசிசி தரவரிசையில் டாப்-8 அந்தஸ்திலுள்ள அணிகள் மட்டும் நேரடியாக சாம்பியன்ஸ் லீக்கில் ஆட தகுதி பெறும் என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி, தரவரிசை பட்டியலில் முதல் 7 இடங்களை பெற்ற அணிகளான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதாக ஐ.சி.சி.  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9-வது இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சிகரமாக வெளியேறியது. ஜிம்பாப்வேவும் தகுதி பெறவில்லை. போட்டிக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா 2வது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்