முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து ஐ.நா.வில் பாக். பிரதமர் ஷெரீப் பேச்சு

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எழுப்பினார். மேலும் காஷ்மீரில் இருந்து ராணுவத்தை இருதரப்பும் படிப்படியாக விலக்குவது உள்ளிட்ட 4 அம்சங்களை திட்டங்களையும் ஷெரீப் முன்வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசியதாவது: உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீனர்களும் காஷ்மீரிகளும் வெளிநாடுகளின் பிடியில் சிக்கி ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த அநீதிக்கு சர்வதேச சமூகம்தான் தீர்வு காண வேண்டும்.

1997ஆம் ஆண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. அப்போது பயங்கரவாதம், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதலே காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் செயல்பாட்டுக்கு வரவில்லை.3 தலைமுறை காஷ்மீர் மக்கள் கொடூரமான ஒடுக்குமுறைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஜம்மு காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தோல்வி அடைந்துவிட்டது.2013ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக 3-வது முறையாக நான் பதவியேற்ற போது இந்தியாவுடன் நல்லுறவை வளர்ப்பதற்குதான் முன்னுரிமை கொடுத்தேன்.

பொது எதிரிகளான வறுமையையும் வளர்ச்சியின்மையையும் எதிர்த்துப் போராட கை கோர்ப்போம் என அழைப்புவிடுத்தேன்.ஆனால் தற்போது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பதற்றத்தைத் தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான அவர் அறிவித்த 4 அம்சங்கள் வருமாறு.,

1) 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தை இருதரப்பும் மதித்து நடப்பது; இந்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பது குறித்து கண்காணிக்க ஜம்மு காஷ்மீருக்கான ஐ.நா. கண்காணிப்புக் குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும். 2) ஐ.நா. விதிகளுக்கேற்ப இருதரப்பும் எல்லைகளில் படைகளைக் குவித்து பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. 3) காஷ்மீரில் இருந்து ராணுவத்தை படிப்படியாகக் குறைப்பது. 4) எந்த வித நிபந்தனையுமின்றி உலகின் மிக உயரமான போர்முனையான சியாச்சினில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது ஆகியவற்றை முன்வைக்கிறேன்.இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்