முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்.ஐ.சி காப்பீட்டுத்திட்டம் அறிமுகம்

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான புதிய காப்பீட்டுத்திட்டத்தை சென்னையில் எல்.ஐ.சி தென் மண்டல மேலாளர் சித்தார்த்தன் நேற்று அறிமுகம் செய்தார்.

எல்.ஐ.சி தென் மண்டலம் சார்பில் சமுதாய பாதுகாப்பு மாதம் சென்னையில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எல்ஐசியின் தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எல்.ஐ.சி. ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள் பங்கேற்கலாம். அமைப்புசாரா தொழில்களான ஆட்டோ ஒட்டுனர்கள் , பீடித்தொழிலாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள் என 45 வகை தொழிலாளர்கள் இந்த புதிய திட்டத்தில் கலந்து கொள்ளலாம். இவர்களில் குறைந்த பட்சம் 25 பேர் குழுவாக சேர்ந்து ஆண்டுக்கு தலா ரூ 200 கட்டினால் குடும்பத்தில் கல்வி கற்கும் இரண்டு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். குறிப்பிட்ட நபருக்கு இயற்கையான இறப்பு நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ 30 ஆயிரம் வழங்கப்படும் , விபத்தின்காரணமாக வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டாலே உடல் ஊனங்கள் ஏற்பட்டாலே ரூ 75 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்த மாதம் 5 லட்சம் பேரை சேர்க்கவும் ஆண்டுமுழுவதும் 17 லட்சம் பேரை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார். மேலும் எல்.ஐ.சி. மூலம் தமிழகம் முழுவதும் ரூ 42 ஆயிரத்து 500 கோடிகள் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிகளில் படிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு எல்.ஐ.சி சார்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை சமூகசேவை அமைப்பின் இயக்குனர். குரியன் தாமஸ், ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தின் இயக்குநர் பேராயர் ஜேக்கப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்