முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் நடித்த புலி திரைப்படம் வெளியானது

வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி திரைப்படம் நேற்று வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் விஜய் நடித்த புலி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புலி படத்தின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதால், சற்று தாமதமாக நேற்று வெளியானது. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் அக்டோபர் முதல் தேதியான நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது முன்னதாக, புலி படத்தின் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் வீடுகள், அலுவலகங்களை வருமான வரித்துறை அதிரடியாக சோதனையிட்டது.

நேற்று முன்தினம் காலை தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது.இந்த நிலையில் படத்தை க்யூபில் வெளியிடுவதற்கான கேடிஎம் எனப்படும் ரகசியக் குறியீடு யாருக்கும் வழங்கப்படவில்லை. கடைசி நேர நிதி நெருக்கடி, தயாரிப்பாளர்களால் எங்கும் நகர முடியாத சூழல் காரணமாக படத்தை வெளியிடுவது தாமதமானது. இதனால் நேற்று அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகின.இந்த நிலையில் சிக்கல்களைக் களைய நேற்று முன்தினம் மாலையிலிருந்தே திரையுலகின் பல்வேறு தரப்பினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, நடிகர் விஷால், நடிகர் சரத்குமார் உள்பட பலரும் ஜெமினி லேபில் படத்தின் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனைத்து சிக்கல்களும் நேற்று காலை தீர்க்கப்பட்டது.திருச்சியில் புலி காட்சிகள் காலை 9 மணிக்கே தொடங்கிவிட்டது. சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 11 மணிக்கு காட்சிகள் தொடங்கின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்