முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் 147 வது பிறந்த நாள்: கவர்னர் ரோசய்யா அமைச்சர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மகாத்மா காந்தியின் 147 வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 147 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவபடத்திற்கு தமிழக கவர்னர் ரோசய்யா, தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழினிச்சாமி, கே. பழனியப்பன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, கே.டி. ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், தலைமை செயலாள் ஞானதேசிகன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதேபோல், நேற்று காலை 8 மணியளவில மெரினாகடற்கரையில் அவரது சிலைக்கு 100க்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் காந்தியடிகளின் 147 பிறந்த நாளையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்.இந்த பேரணியை செய்தி மற்றும் சிறப்பு திட்ட அமுலாக்க துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் தீண்டாமை ஒழிப்பு, சமூகஒற்றுமை, உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அகிமை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்களில் எடுத்துச்சென்றனர்.இந்த பேரணி கலங்கரை விளக்கத்தில் துவங்கி உழைப்பாளர் சிலையை சென்றடைந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்