முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை நிறுத்துங்கள் : பாகிஸ்தான் பிரதமருக்கு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் கூறினார். இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தைக்கு 4அம்ச கருத்துருவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார். இந்த கருத்துருவை இந்திய வெளியுறவுத்தறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்க வில்லை.  இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் முதலில் கைவிட வேண்டும்.இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பினால் பாகிஸ்தான் இதனை முதலில் செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் அமைதி நடவடிக் கை மேற் கொள்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் 4அம்ச கருத்துருவை தெரிவித்துள்ளது. நாங்கள் ஒரே ஒரு அம்சத்தைதான் எதிர் பார்க்கிறோம். தீவிரவாத குழுக்களுக்கு உதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த புதன் கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில்இந்தியாவுடன் நாங்கள் அமைதி நடவடிக் கைமேற் கொள்வதற்கு 4அம்ச கருத்துருக்களை தெரிவித்து இருந்தோம். போர் நிறுத்தத்தை முறைப்படுத்துதல், காஷ்மீரில் ராணுவ பலத்தை குறைத்தல், சியாச்சின் பனிப்பகுதி மற்றும் படைகளை பயன் படுத்துவதை தவிர்த்தல் போன்ற நிகழ்வுகளை இந்தியா மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

நவாஸ் ஷெரீப் தெரிவித்த இந்த கருத்துக்கு சுஷ்மா சுவராஜ் பதிலளிக் கையில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தவே விரும்புகிறது.தீவிரவாதம் மற்றும் வன்முறையற்ற நிகழ்வு நிலையிலேயே பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும். தீவிரவாதம் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற இந்தியா விரும்பியது.இதனைத்தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக் கை டைரக்டர் ஜெனரல்கள் கூட்டம் நடைபெற வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும் தீவிரமாகவும் நம்பக தன்மையுடனும் நடந்தால் இரு நாடுகள் இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago