முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி இங்கிலாந்தில் பணியிடங்களில் சீக்கியர்கள் தலைபாகை அணிய தடை இல்லை

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்தில் பணியிடங்களில் சீக்கிய மதத்தினைச் சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் 1989 ஆம் ஆண்டு முதல், கட்டுமான தொழிலில் மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மற்ற துறைகளில் தலைப்பாகைக்கான இந்த விலக்கு வழங்கப்படவில்லை. மாறாக பிற துறைகளில் ஹெல்மெட்டுக்கு பதிலாக தலைப்பாகை அணிந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருந்து வந்தது. கட்டுமான துறை தவிர்த்து பிற துறைகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்காமல் சட்டத்தில் உள்ள ஓட்டை தடுப்பதாக சீக்கிய அமைப்புகள் அரசிடம் கூறி வந்தன. இந்த நிலையில் அவர்களது கோரிக்கையை இங்கிலாந்து அரசு தற்பொழது ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கு தேவையான சட்ட திருத்தம் செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக பணி இடங்களில் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை.  சீக்கியர்களுக்கு பெரும்பாலான துறைகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தில் திருத்தம்: இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள சீக்கிய கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் குரிந்தர் சிங் ஜோசன் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் வேண்டுகோளுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்து இருக்கிறது. சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறது" என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்