முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.15 லட்சம் அமெரிக்க டாலர் சிக்கியது

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் புறப்பட இருந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.சென்னை மண்ணடியைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 35) என்பவரின் கைப்பை யை சோதனை செய்த போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தன. அதை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லை.இதையடுத்து அது ஹவாலா பணமாக இருக்குமா என்று அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவரது பயணத்தை ரத்து செய்து விட்டனர். அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானம் ரத்து

குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வர வேண்டிய பயணிகள் விமானம் வானிலை மோசம் காரணமாக இயக்கப்பட வில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று காலை 4.30 மணிக்கு மீண்டும் குவைத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் செல்ல இருந்த 192 பயணிகள் அவதி அடைந்தனர். குவைத் விமானம் இன்று புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago